புகையிலைhttp://tawp.in/r/142d

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் பெயரைப் பெற்றது. இதனைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர். புகையிலை, நிக்கோட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்ததாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்காக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது. இதனால் இது, ஐக்கிய அமெரிக்காவின்தென்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இப்பகுதிகளில் பருத்தி அறிமுகப்படுத்தப்படும் வரை காசுப் பயிராக/பணப்பயிராக இதன் முதன்மை நீடித்தது.
நிக்கொட்டீனா பேரினத்துள் அடங்கும் பல புகையிலை இனங்கள் உண்டு. இப் பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜான் நிக்கொட்என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டது. இவர் 1559 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு ஒரு மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார். இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய்தொண்டை,நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக