24 நவம்பர், 2011


    நுண்ணுயிர் சத்து வழங்கும் சணல் பயிர் மண்ணின் மலட்டுத்தன்மை நீக்க உதவி


    பயிருக்கு தேவையான நுண்ணுயிர் சத்து சணலை பயிரிடுவதால் மண் தரமானதாக ஆவதுடன் பயிர் செழித்து வளர துணைபுரிகிறது.
    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப்பண்ணையில் கோடையில் தெளிக்கப்பட்ட சணல் விதை தற்போது வளர்ந்து, தண்ணீர் வந்ததும் அதை மடக்கி உழவு செய்யும் பணி நடக்கிறது. சணலை தெளித்து பயிரிட்டு, அதை தண்ணீர் வந்ததும் மடக்கி உழுவதால் மண் தரமானதாகவும், பயிர் செழித்து வளரவும் துணை புரிவதுடன், பயிருக்கு முக்கிய தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தருகிறது. இதனால், தண்ணீர் சிறிதளவு வைத்தாலும் அதை தேக்கி வைத்துக் கொள்வதுடன், மண் இறுகாமல் இருக்க தேவையான வேலைகளை செய்கிறது.

    மேலும், பயிர் செழுமையாக, பசுந்தன்மையுடன் வளர அதிக அளவில் இது துணை புரிகிறது. இதனால், மண் மலடாவது குறைகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ சணல் விதை தேவைப்படும். இதற்கான செலவு 800 ரூபாயாகும். இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இதை பயன்படுத்துவதால் கடந்த பல ஆண்டாக ரசாயன உரங்களைப்போட்டு பயிரிடப்பட்ட விளை நிலங்களின் மண் தரம் மாறுவதுடன், பயிருக்குத்தேவையான நுண்ணுயிரை அதிக அளவில் தரும்.இதை விவசாயிகள் கோடையில் தெளித்து பயன்பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக