24 நவம்பர், 2011

சம்பா நெல் நாற்றங்கால் பயிர் பாதுகாப்பு முறை


ம்பா நெல் நாற்றங்கால் பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

÷இது குறித்து உதவி இயக்குநர் ப.சௌந்தரராஜன் கூறியுள்ளதாவது:-

பூச்சி, நோயால் பாதிப்பில்லாத வாளிப்பான, வீரியமான தரமான நாற்றுக்களை நடுவதால் மட்டுமே நடவு வயலில் அதிக தூர்கள் உருவாகி நிறைந்த விளைச்சல் பெற இயலும். நெல் நாற்றங்காலை சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், பச்சைத் தத்துப்பூச்சி ஆகிய பூச்சிகள் தாக்கி நாற்றுக்களின் தரத்தை பாதிக்கும்.

இப்பூச்சிகளின் தாக்குதலால் நாற்றின் இலைகள் சுருண்டு, மஞ்சளாகி வெளுத்து வாடிக் காணப்படும். ÷நாற்றங்காலில் 10 சதவீத நாற்றுக்களில் மேல் இரண்டு இலைகள் அரைபாகம் சுருண்டு இருந்தாலோ, 5 இடங்களில் கையால் 5 முறை தடவும்போது பேன்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டினாலோ பொருளாதார சேத நிலையைத் தாண்டியுள்ளது எனக் கணக்கில் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷பச்சைத் தத்துப்பூச்சியாக இருந்தால் ஒரு சதுரமீட்டருக்குள் 20 பூச்சிகள் இருந்தால் பொருளாதார சேத நிலையாக கணக்கில் கொள்ள வேண்டும்.

இவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கான நாற்றங்காலில் மானோகுரோட்டபாஸ் 36 டபிள்யூ.எஸ்.சி மருந்து 40 மில்லி அல்லது பாசலோன் 35 ஈ.சி. மருந்து 60 மில்லி அல்லது பென்தியான் 100 ஈ.சி மருந்து 20 மில்லி ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படு
த்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக